பிறந்து ஒருநாளான குழந்தையுடன் நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!

0
67

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று  வயோதிபர் ஒருவர் நடுவீதியில் அமர்ந்து தனது எதிர்ப்பை அரசாங்கத்திற்கு எதிராக வெளியிட்டுள்ளார்.

குறித்த வயோதிபர் கொழும்பு – கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்தில் வீதியின் நடுவில் அமர்ந்து தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். முதியவர்கள், கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள் என அனைவரும் தற்போது வீதிகளில் இறங்கி நீதிக்கான போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். 

இது தொடர்பான படங்கள் சமூகவலைத் தளங்களில் அதிகம் பரவலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இன்று திங்கட்கிழமை பிறந்து ஒருநாளான குழந்தையொன்று அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் அவர்களின் பெற்றோருடன் இணைந்துள்ளமை அனைவரையும் பெரும் கவலையைடைய வைத்துள்ளது.

சிறந்த மற்றும் நிலையான எதிர்காலத்தை பிள்ளைகளுக்கு வழங்கும் பொருட்டே இவ்வாறு பெற்றோர் தமது பிள்ளையுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.