நாட்டில் அரசிற்கெதிரே வெடிக்கும் போரட்டங்கள்!

0
64

நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் மக்கள் மற்றும் தேரர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய தினம் நுவரெலியா அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் 300 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்ப்புப் பதாதைகளை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பி போராட்டகாரர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு , விலையேற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி வருவதைச் சுட்டிக் காட்டியும் உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியும் போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.