எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரைவில் பிரதமராக பதவி பிரமாணம் செய்ய போகின்றாரா?

0
103

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரைவில் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி போலியானது என ஐக்கிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandra) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அந்த செய்தியில், 

கட்சியின் பெயர் பதிக்கப்பட்ட ஆவணத்தில் தனது கையொப்பத்துடன் பரப்பப்படும் செய்தி தவறானது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவை உள்ளடக்கிய அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்க நாங்கள் தயாராக இல்லை என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பெயர் பதிக்கப்பட்ட ஆவணத்தில் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரைவில் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.