இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்:கோட்டாபய ராஜபக்சவிற்குமிடையில் இடம்பெற்றுள்ள சந்திப்பு!

0
78

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் கோட்டையிலுள்ள அரச தலைவர் மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கோரிக்கைக்கு அமைவாக மலையகப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு திட்டமிடுதல், தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபா மற்றும் ஆசிரியர் உதவியாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் எம். இராமேஷ்வரன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.