அரசாங்கத்திற்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!

0
109

பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் அரசாங்கத்தை தொடர முயற்சித்தால் அரசாங்கத்தின் பெரும்பான்மையை இல்லாமல் செய்துவிடுவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை நாடாளுமன்றத்தில் 50க்கும் மேற்பட்டோர் சுயாதீனமாக செயற்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தை வீட்டிற்கு செல்லுமாறு மக்கள் கேட்பது மிகவும் நியாயமானது.

இந்த அழுத்தத்தை புரிந்து கொண்டு அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று கூறிய அவர், இந்த தருணத்தில் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.