வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற நாமல் ராஜபக்சவின் மனைவி!

0
95

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச மற்றும் அவரது பெற்றோர்கள் இலங்கையைவிட்டு வெளியேறியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இன்று காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

லிமினி ராஜபக்ஷவும் அவரது பெற்றோரும் தீவை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர்கள் எந்த நாட்டிற்கு சென்றனர் என்ற தகவல் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மற்ற இரு மருமகள்களும் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.