முல்லைத்தீவில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு!

0
115

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டு சம்பவத்தின் போது காயமடைந்த எழுவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் நேற்று மாலை இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்திற்கு அருகில் இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு வாள்வெட்டில் முடிந்துள்ளது.

இந்த வாள்வெட்டு சம்பவத்தின் போது 4 ஆம் வட்டாரம் முள்ளியவளை பகுதியினை சேர்ந்த நான்கு பேர் வாள் வெட்டிற்கு இலக்காகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் காயத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.