நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளிற்கு பாதுகாப்பு!

0
96

மாதிவெல பகுதியில்  உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதிக்கு உடனடியாக நடைமுறைக்கு  வரும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின்  உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வீட்டுத் தொகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் புலனாய்வுக் குழுக்களும் உஷார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.