ஊரடங்குச்சட்டம் நீடிக்கப்படுமா? – காவல்துறை பேச்சாளர் வெளியிட்ட தகவல்

0
101

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை நாளை காலை 6 மணிக்கு மேல் நீடிப்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

அறிவித்தபடி ஊரடங்கு சட்டம் நாளை காலை தளர்த்தப்படும் என சிரேஷ்ட பிரதி காவல் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊரடங்குச் சட்டத்தை மீறி இன்று மாலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.