அடுத்த சில நாட்களுக்குள் நாடு படிப்படியாக மீளும் -மஹிந்த ராஜபக்ச

0
77

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளால் மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று திட்டமிடப்பட்டிருந்த 06 மணி நேர மின்வெட்டு ஒரு மணி நேரத்திற்கு 40 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மக்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு, உரிய அதிகாரிகளுக்கு பிரதமர் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

மேலும் அடுத்த சில நாட்களுக்குள் நாடு படிப்படியாக மீளும் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.