பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை! கல்வி அமைச்சிடம் கோரிக்கை

0
100

மின்சாரத் தடையினால் பாடசாலை மாணவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் எதிர்வரும் திங்கட்கிழமை ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்குமாறு கல்வி அமைச்சுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள மக்கள் தினமும் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்சாரம் இன்றி இருக்க வேண்டியுள்ளது.

இதனால் பொதுமக்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், பாடசாலை நேரத்தில் மின்சார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.