ஊரடங்கு சட்டத்தையும் மீறி கொழும்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

0
92

கொழும்பில் ஊரடங்கு சட்டத்தையும் மீறி மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹோமாகம, மஹரகம, யக்கல, குருணால் உட்பட பல பகுதிகளில் ஒன்று கூடியுள்ள பெருமளவு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.

மக்களின் எழுச்சிப் போராட்டங்களை தடுக்கும் வகையில் அவசர கால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், இன்று முதல் திங்கட்கிழமை காலை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனை பொருட்படுத்தாத மக்கள் தமது எதிர்ப்பினை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.