உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ள மைத்திரி!

0
101

சிறி லங்காவின் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் புத்தாண்டிற்குப் பின்னர் கொழும்பு மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் உயர் நீதிமன்றம் அவர் குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்த இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்திருந்தது.

நீதிமன்றத்தின் இந்த முடிவை மதித்து உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற அவர் தீர்மானித்துள்ளர்.

முன்னாள் அரச தலைவர் என்ற வகையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய உத்தியோகபூர்வ இல்லம் இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை.

இதனால், மலலசேகர மாவத்தை இல்லத்தில் இருந்து அவர் எந்த வீட்டுக்கு செல்ல போகிறார் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.

மேலும் மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றை வழங்குமாறு, சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் உட்பட மூத்த உறுப்பினர்கள், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.