இலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள அறிவித்தல்!

0
98

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் இன்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தூர மற்றும் குறுகிய தூர சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து சேவைகள் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. 

இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணியிலிருந்து திங்கட் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு நடைமுறைக்கு வரும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 04 திங்கட்கிழமை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.