இறந்தநிலையில் மீட்கப்பட்ட உக்ரைனின் போர் ஆவணப்பட முன்னணி செய்தியாளர்!

0
102

உக்ரைனிய போர் புகைப்பட செய்தியாளர்- மெக்சிம் லெவின், கியேவின் வடக்கே ஒரு கிராமத்திற்கு அருகில் இறந்த நிலையில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

40 வயதான லெவின், கியேவின் வடக்கே உள்ள விஸ்கோரோட் மாவட்டத்தில் ரஸ்ய- உக்ரைன் படைகளின் கடும் மோதலை ஆவணப்படுத்திக்கொண்டிருந்த நிலையில் மார்ச் 13 முதல் பின்னர் காணாமல் போயிருந்தார்.

இந்தநிலையில் ஏப்ரல் முதலாம் திகதி நேற்று அவரின் உடல் குட்டா மெஜிகிர்ஸ்கா கிராமத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

லெவின் உக்ரைனிய செய்தித்தாள் ஒன்றில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்தார்,

மேலும் போர்களை ஆவணப்படுத்தும் அவரது புகைப்படங்களும் காணொளிகளும்; உலகம் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

இந்த செய்தியாளரின் மரணத்துடன் உக்ரைனில் ஒரு மாதத்திற்கும் மேலாக ரஸ்யா மேற்கொண்டு வரும் படையெடுப்புகளால் குறைந்தது எட்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.