அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு! – அமெரிக்க தூதுவர்

0
101

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு இலங்கையர்களுக்கு உரிமை உண்டு என இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக வெளிப்பாட்டிற்கு இது அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இலங்கையின் நிலைமையை தான் உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.