அமைச்சுப் பதவியை தியாகம் செய்யத் தயாராகவுள்ள நாமல்!

0
103

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், அடுத்த சில நாட்களில் காபந்து அரசாங்கத்தை நியமிப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதித்தால் அரசியல் ஒற்றுமைக்காக தனது அமைச்சுக்களை தியாகம் செய்ய தயாராக உள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவுகள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், இது தேர்தலுக்குச் செல்வதற்கான நேரம் அல்ல, மாறாக காபந்து அரசாங்கம் நியமிக்கப்பட்டால், பதவி விலகி அரசியல் ஒற்றுமைக்கு வழி வகுக்கும்.

தற்போதைய உடனடி தேவை என்பது பொருளாதாரமும் ஐக்கியமும் ஆகும்.

இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு, மின் நெருக்கடி மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்ற விடயங்கள் அவசரமாக தீர்க்கப்பட வேண்டியதுடன், நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு அரசியல் ஒற்றுமையும் தேவையாகும்.

ஆகவே இதை மனதில் வைத்துக்கொண்டு அரசியல் ஒற்றுமைக்காக காபந்து அரசாங்கம் அமைந்தால் எனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவேன் என தெரிவித்துள்ளார்.