வீட்டில் இருந்தே தமது பணிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த அறிவுத்தல்!

0
110

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருளை சேமிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் இருந்தே தமது பணிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அறிவுத்தல் விடுத்துள்ளார்.

அலுவலகம் மற்றும் பிரதமரின் கீழ் உள்ள அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், இடைக்கிடையில் மின்சாரம் தடைப்படுகின்ற போதிலும், அதிகாரிகள் தங்களால் இயன்றளவு சேவைகளை செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நெருக்கடியினால் மக்கள் படும் இன்னல்களை அரசாங்கம் என்ற வகையில் நாம் உணர்ந்து கொண்டு, இதனை தீர்ப்பதற்கான வழிமுறைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.