மின் வெட்டுத் தொடர்பாக வெளியான தகவல்!

0
310

இன்று 13 மணிநேரம் மின் தடை மேற்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் இலங்கை மின்சார சபையினால் இவ்வாறான மின்வெட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 15 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

மேலும், நாளைய (31) தினம் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அட்டவணை இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

குழுக்கள் A,B,C,D,E,F:

அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை – 3 மணி நேரம்

மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை – 4 மணி நேரம்

மாலை 6 மணி முதல் 12 மணி வரை – 6 மணி நேரம்   

குழுக்கள் G,H,I,J,K,L:

காலை 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை – 3 மணி நேரம்

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை – 4 மணி நேரம்

மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை- 6 மணி நேரம் 

குழுக்கள் P,Q,R,S:

அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை – 3 மணி நேரம்

மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை- 4 மணி நேரம்

மாலை 6 மணி முதல் 12 மணி வரை – 6 மணி நேரம் 

குழுக்கள் T,U,V,W:

காலை 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை – 3 மணி நேரம்

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை – 4 மணி நேரம்

மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை – 6 மணி நேரம் 

குழுக்கள் M,N,O,X,Y,Z:

காலை 5.30 மணி முதல் காலை 9 மணி வரை – 3 மணி 30 நிமிடங்கள்

மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை- 2 மணி நேரம்