மரண தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேலால் ஜயசேகர விடுதலை

0
536

கொலை குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உட்பட மூன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று விடுதலை செய்து தீர்பளித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தில் இரத்தினபுரி காவத்தை பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது ஒருவரை சுட்டுக்கொன்றமை சம்பந்தமாக இரத்தினபுரி மேல் நீதிமன்றம் பிரேமலால் ஜயசேகர உட்பட மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மூன்று பேரையும் கொலை குற்றச்சாட்டில் இருந்து முழுமையாக விடுதலை செய்துள்ளது.

கொலை குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அதற்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்த பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துக் கொண்டமை சம்பந்தமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு முன்வைக்கப்பட்டது.

எனினும் அவர் மேன்முறையீட்டு செய்துள்ளதை சுட்டிக்காட்டி, எதிர்ப்பை நீர்த்துப்போக செய்த சபாநாயகர், அவரை நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட அனுமதி வழங்கியிருந்தார்.

மரண தண்டனை கைதியாக பிரேமலால் ஜயசேகர நாடளுமன்ற கூட்டங்களில் கலந்துக்கொண்டு வரலாற்று சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

எவ்வாறாயினும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நான்கரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிப்போனது.