சேவையை இடைநிறுத்தியுள்ள இரத்மலானை விமான நிலையம்!

0
296

சர்வதேச விமான நிலையமாக அண்மையில் திறந்து வைக்கப்பட்ட இலங்கையின் பழமையான விமான நிலையமான இரத்மலானை விமான நிலையத்திற்கு மாலைதீவுக்கு சொந்தமான விமானம் முதலாவது பயணமாக பயணிகளுடன் தரையிறங்கியது.

விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கி, 96 மணி நேரங்கள் கடந்த பின்னரும் பயணிகள் எவரும் இல்லாத காரணத்தினால், இரத்மலானைக்கான தனது சேவையை இடைநிறுத்தியுள்ளது.

கட்டுநாயக்க மற்றும் மத்தள ஆகிய இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும் நிலையில், மற்றுமொரு சர்வதேச விமான நிலையமாக இரத்மலானை திறந்து வைக்கப்பட்டது. அந்த திறப்பு விழாவுக்காக மாத்திரம் ஆறு மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுளள்தாக தெரியவருகிறது.

கடந்த 27 ஆம் திகதி இரத்மலானை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக திறந்து வைக்கப்பட்டதுடன் மாலைதீவின் மோல்டிவியன் விமான சேவையின் விமானம் மாலைதீவு பிரஜைகளை ஏற்றிக்கொண்டு முதலில் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானமாகும்.

இந்த பயணிகளின் பின்னர் மாலைதீவில் இருந்து இரத்மலானைக்கோ, இரத்மலானையில் இருந்து மாலைதீவுக்கோ செல்ல பயணிகள் எவரும் இல்லாத காரணத்தினால், அந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.