வில் ஸ்மித் அறைந்த நிகழ்வில் இருந்து நான் மீளவில்லை ! – கிறிஸ்ராக்

0
68

கிறிஸ்ராக் பேச்சு 

சமீபத்தில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது, இதில் பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் தங்களின் முதல் ஆஸ்கார் விருதை கரம் பிடித்தனர்.

அப்படி தனது முதல் ஆஸ்கார் விருதை King Richard படத்திற்காக வென்றார் நடிகர் வில் ஸ்மித்.

விருதை வென்றது மட்டுமின்றி வில் ஸ்மித் கிறிஸ்ராக்கை மேடையில் அறைந்தது உலகம் முழுவதும் பேசப்பட்டது. அதன்படி தனது மனைவியை கிறிஸ்ராக் கொச்சைப்படுத்தி பேசியதால் வில் ஸ்மித் அப்படி நடந்து கொண்டார்.   

மேலும் சமீபத்தில் கிறிஸ்ராக் தனது நிகழ்ச்சியில் பேசியபோது ” ஆஸ்கார் விருது விழாவில் வில் ஸ்மித் அறைந்த நிகழ்வில் இருந்து நான் மீளவில்லை. இந்த விவகாரம் குறித்து விரைவில் பேசுவேன், அது தீவிரமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும்” என கூறியுள்ளார்.