வன்னி மாவட்டச் செயலாளர் விடுத்துள்ள கோரிக்கை!

0
62

“கோட்டா – மகிந்தவின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக ஒன்று சேருமாறு“ புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்டச் செயலாளர் என்.பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, 

கோட்டா, மகிந்தவின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராகவும் நாளை 31ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு ஒன்றை நடாத்துவதற்கு புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

எனவே அரசியல் வேறுபாடுகளைக் கடந்தும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கவும் மக்கள் போராட்டத்தை வலுப்படுத்தவும் மக்கள் போராட்டத்தை வெற்றி பெறச்செய்வதற்கும் இணையுமாறு கட்சி அழைத்து நிற்கின்றது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

”எமது நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை பற்றி அனைத்து மக்களும் அறிந்தவைகளே. ஏனெனில் அனைத்து மக்களும் ஏதோ ஒரு வகையில் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக வரிசையிலோ அல்லது பொருட்கள் கிடைக்காமையினால் அவதிப்படக்கூடிய சூழலினை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

நாட்டினுடைய இந்த நிலைமை எவ்வாறு உருவெடுத்தது என்பதை இலங்கை மக்களாகிய நாங்கள் அனைவரும் உணர வேண்டியவர்களாக இருந்து வருகின்றோம்.