மெழுகுவர்த்திகளுக்கு பாரிய தட்டுபாடு!

0
72

  நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் மின் துண்டிப்புடன், உள்ளூர் சந்தைகளில் மெழுகுவர்த்திகளுக்கு பாரிய தட்டுபாடு ஏற்பட்டுள்ளன.

அத்துடன், மெழுகுவர்த்திகளின் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளது.

அதற்கமைய, ஹட்டன் நகரில் சிறிய மெழுகுவர்த்தியொன்று 15 ரூபாய்க்கும் பெரிய மெழுகுவர்த்தி 75 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

எனினும் நுகர்வோருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவே மெழுகுவர்த்திகள் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.