முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் உட்பட நால்வர் கைது!

0
68

மட்டக்களப்பு ஏறாவூர் ஐயங்கேணி பிரதேசத்தில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

மட்டக்களப்பு ஏறாவூர் ஐயங்கேணி பிரதேசத்திலுள்ள மக்களைப் அச்சுறுத்தி கொள்ளை கொலை கத்திக்குத்து வழிப்பறி ஆகிய குற்றச்செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வவுனியாவைச் சேர்ந்த 40 வயதுடைய முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தரான சோழன் என்பவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனையவர்கள், கோடரி, மற்றும் ஹெரோயின் ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நால்வர் கைதாகியுள்ள நிலையில் மேலும் பலர் தேடப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.