மாகாண கல்வித்திணைக்களத்திற்கு முன் எரிவாயுவினை பெற காத்திருக்கும் உத்தியோகத்தர்கள்!

0
49

யாழ். மாவட்டத்தில் அரச அலுவலகர்கள் கடமையாற்றிக்கொண்டு எரிவாயுக்காக மாகாண கல்வித்திணைக்களத்தில் இலகுவாக பெற்றுக்கொள்ளுவதற்கு மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

நாளாந்தம் விற்பனையாகும் எரிவாயு பெற்று கொள்ளுவதற்கு வாடிக்கையாளர் எரிவாயு நிலைய முகவர்களிடம் நீண்டவரிசையில் காத்திருத்து இருக்கின்றனர்.

அவ்வாறான நிலையினை பொறுப்படுத்தாது நேற்று யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள செம்மணி வீதியில் உள்ள மாகாண கல்வித்திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தமது கடமையினை செயலாற்றி கொண்டு தமது திணைக்களத்தில் முன்பாக எரிவாயுவினை பெற்றுக்கொள்ளுவதற்கான அடுக்கிய நிலையிலான வெற்று எரிவாயு கொள்கலன்களை அடுக்கி வைத்துள்ளனர்.

இந்நிலை தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் தொலைபேசியுடாக ஊடகவியாளர் ஒருவர் இது தொடர்பாக வினவியபோது, நுகர்வோர் அதிகார சபையின் அலுவலகர் ஒருவரை அனுப்பிவைக்கின்றதாக எடுத்துரைத்துள்ளார்.

இது தொடர்பாக யாழ். மாவட்ட செயலக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அலுவலகர் குறித்த இடத்துக்கு வருகைதந்து அவதானித்தபோது வடமாகாண கல்வித்திணைக்களத்தின் நிர்வாக நிலை அதிகாரியிடம் கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட செயலக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அலுவலர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையில் எரிவாயினை பெற்றுக்கொள்ளுவதற்கு உரிய முகவர்கள் ஊடாகத்தான் நடைமுறையுள்ளது.

அதனைத்தான் நடைமுறைப்படுத்தியுள்ளோம் குறித்த விடயம் தொடர்பாக எந்தவொரு மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது குறித்த திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் இவ்வாறான நிலையில் வெற்று எரிவாயுவினை அடுக்கிவைப்பது தொடர்பாக உரிய மாகாணகல்வித் திணைக்கள செயலாளருடன் கதைத்து மிககூடிய கவனம் செலுத்தப்படும் என்றார்.

மேலும் இவ் விடயம் தொடர்பாக மாகாண கல்வித்திணைக்கள நலன்புரிக்கழகம் தான் இதற்கான முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியிருக்கின்றது எனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.