மருந்துகளின் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை!

0
51

மருந்துகளின் விலையை மீண்டும் அதிகரிக்குமாறு மருந்து இறக்குமதியாளர்கள் சங்கம் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையினால் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக மருந்துகள் விநியோகம் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சின் செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தங்களின் கோரிக்கை ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சில மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.