பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளம் பெண் உயிரிழப்பு!

0
61

மொரவக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளம் பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.

மொரவகவைச் சேர்ந்த 36 வயதுடையப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மொரவக நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைய இம்மாதம் 28ஆம் திகதி குறித்தப் பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டப் பெண் மொரவக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக மொரவக அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மாத்தளை வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மாரடைப்பால் குறித்தப் பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.