பெரிய வெங்காயத்தின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு!

0
59

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேசமயம் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் முன்னதாக 110 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

எனினும், நேற்றைய தினம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 210 ரூபாவாக காணப்பட்டதாக அந்த தகவல்கல் கூறுகின்றன.

இதேவேளை இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, இவ்வாறு பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை நியாயமற்றது என மொத்த கொள்வனவாளர்கள் தெரிவிக்கின்றனர்.