பிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது

0
115

பிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தீர்வை வரி செலுத்தாது நாட்டிற்கு 1.43 கிலோ கிராம் தங்கத்தை கொண்டு வந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 39 வயதான இவர் பிரான்ஸில் வசித்து வந்த நிலையில் நாட்டிற்கு வந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விமான நிலைய காவல்துறையினரும், சுங்கப் பிரிவினரும் இணைந்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.