நீர் மின்னுற்பத்தி நாளை முதல் நிறுத்தம்!

0
51

சமனலவெவ மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் மின் உற்பத்தி நாளை முதல் நிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் முகாமையாளர் அபேசேகர, அவ் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நாளை முதல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதுமானதாக இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் நேற்று 8.4 வீதத்தாலும் சமனலவெவ நீர்மட்டம் 11.8% வீதத்தாலும் குறைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனால் இவற்றின் மின்னுற்பத்திகள் நாளை முதல் நிறுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.