நாட்டில் 24 மணிநேர மின்வெட்டு ஏற்படும்! எச்சரிக்கை விடுத்துள்ள பாட்டலி சம்பிக்க ரணவக்க

0
97

சரிபார்க்கப்படாத நடைமுறைகளை எதிர்கொண்டால் முழு தேசிய மின்வட்டமும் வீழ்ச்சியடையக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நாட்டில் தற்போது பத்து மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையில் நடைமுறையிலுள்ள முறைசாரா நடைமுறைகள் தொடருமானால் ஏப்ரல் 15ஆம் திகதி வரை 24 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் மருந்து, உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டும் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.