ஜீ தமிழின் ஹிட் சீரியல் செம்பருத்தி முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த தகவல்

0
83

ஜீ தமிழில் 2017ம் வருடத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் தொடர் செம்பருத்தி. நாராயணன்-தர்மலிங்கம் ஆகியோர் கதை எழுத தொடர் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சீரியலின் பயணம்

கார்த்திக்-ஷபானா இருவரும் சீரியல் ஆரம்பத்தில் இருந்து ஜோடியாக நடிக்க இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்தது. பின் சில வருடங்களுக்கு முன் கார்த்தி தொடரில் இருந்து வெளியேற அக்னி என்பவர் தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்க தொடங்கினார்.

மற்றபடி பெரிய கதாபாத்திர நடிகர்கள் மாற்றம் எதுவும் நடக்கவில்லை.

ஒரே சீசனாக 1258 எபிசோடுகள் ஓடியுள்ளது.

அடுத்து நடக்கப்போவது என்ன

தொடர் இடையில் சில டல்லான கதைக்களம் அமைய ரசிகர்கள் அய்யோ தொடரை முடித்துவிடலாமே என புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். கொரோனா நேரத்தில் கூட தொடர் இடைவிடாமல் நடத்தப்பட்டு வந்தது.

இப்போது சீரியல் குறித்து என்ன விஷயம் என்றால் விரைவில் இந்த தொடர் முடிவுக்கு வர இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை.