கோட்டாபயவின் முகநூலில் செய்யப்பட்டுள்ள திடீர் மாற்றம்!

0
62

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ முகநூல் தள பதிவுகளில் கருத்துக்கள் பதிவிடுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நள்ளிரவு முதல் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பேஸ்புக் பதிவுகளில் பயனர்களால் கருத்துகளைப் பதிவு செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இது குறித்து சமூக ஊடக ஆய்வாளர் சஞ்சன ஹத்தொட்டுவ தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

“2010 முதல் இலங்கையின் அனைத்து அரசியல்வாதிகளின் பேஸ்புக் பக்கங்களையும் ஆய்வு செய்து வருகின்றேன். யாரும் அவர்களின் உத்தியோகப்பூர்வ பக்கங்களில் கருத்துகளை பதிவிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை.

தற்பொழுது இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச முதன் முறையாக கருத்துகள் பதிவிடுவதை மட்டுப்படுத்தியுள்ளார்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Gallery