கனடாவில் பிறந்த குழந்தைகளுக்கான குடியுரிமையை எவ்வாறு பெறுவது ?..

0
72

கனேடிய குடியுரிமை பெறுவதில் ஏராளம் நன்மைகள் உள்ளன.

கனேடிய குடியுரிமை பெற்றால், நிலையான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சூழல் கொண்ட ஒரு நாட்டில் நீங்கள் நிரந்தரமாக வாழலாம்.

உங்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும், காப்பீடு பெறலாம், உங்கள் பிள்ளைகளுக்கு உயர் தர கல்வி கொடுக்கலாம், மற்றும் 185 நாடுகளுக்கு விசா இல்லாமலே நீங்கள் பயணம் செய்யலாம்.

உங்கள் வாழ்வின் எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் நீங்கள் கனேடிய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம். நீங்கள் கனேடிய குடியுரிமை விண்ணப்பத்திற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வயது வரம்பே கிடையாது. உங்கள் பெற்றோர் உயிருடன் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, நீங்கள் குடியுரிமை ஆதாரம் பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

கனேடிய குடியுரிமை ஆதார சான்றிதழ் பெறுவதில் ஒரு புலம்பெயர்தல் சட்டத்தரணியின் உதவியை நாடுவது நல்லது.

நீங்கள் பிறந்த நேரத்தில், உங்கள் பெற்றோரில் ஒருவராவது கனேடிய குடிமகனாக/குடிமகளாக இருந்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டும் என்கிறது, கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு.

பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், குடியுரிமை அட்டை அல்லது குடியுரிமை சான்றிதழை ஆதாரமாக சமர்ப்பிக்கலாம். அதற்கான கட்டணம் 75 கனேடிய டொலர்கள்.

கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு உங்கள் விண்ணப்பம் முழுமையானது என்பதை உறுதி செய்தபின், அது விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டதற்கான ரசீதை உங்களுக்கு அளிக்கும்.