உக்ரைனை ஊடுருவ புடின் போட்ட திட்டம் தமக்கே பாதகமானது எப்படி ? பிரித்தானிய உளவுத்துறை தகவல்

0
98

உக்ரைனை ஊடுருவ புடின் போட்ட திட்டம் சொதப்பலாக முடிய, அவர் தொடங்கிய போர் அவருக்கே பாதகமாக ஆகிவிட்டதாக பிரித்தானிய உளவுத்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய உளவுத்துறை பிரிவு ஒன்றின் தலைவரான Sir Jeremy Fleming, புடினுடைய திட்டம் தோற்று வருவதாகவும், போருக்கு சரியாக தயாராகாத ரஷ்ய வீரர்கள் மேலிட உத்தரவுக்கு கீழ்ப்படிய மறுப்பதாகவும், தங்கள் ஆயுதங்களை வேண்டுமென்றே நாசம் செய்துவருவதாகவும், தவறுதலாக தங்கள் விமானத்தையே சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் பிரித்தானிய உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், புடினுடைய ஆலோசகர்களே, ரஷ்ய படைகளுக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து அவரிடம் பொய்யான தகவல்களைக் கொடுத்து வருவதாகவும் Fleming தெரிவித்துள்ளார்.

ஆகவே, புடின் போட்ட கணக்கு பலிக்காததால், வேறு வழியில்லாமல் அவர் பிளான் Bயை கையில் எடுத்துள்ளதாக ஆவர் தெரிவித்துள்ளார்.

பிளான் B என்பது, அப்பாவி பொதுமக்கள் மீதும் நகரங்கள் மீதும் மிருகத்தனமாக தாக்குதல் நடத்துவது என்கிறார் Fleming.