இரவில் மக்களோட மக்களாக கோவிலுக்கு வந்த அஜித்

0
73

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு தனி வழியில் பயணிப்பவர். இவரது வலிமை தான் கடைசியாக வெளியாகியுள்ளது, படத்திற்கு இருந்த எதிர்ப்பார்ப்பு பூர்த்தியாகியுள்ளது.

ஏகே 61

அஜித்தின் அடுத்தடுத்த படங்களை ரசிகர்கள் ஸ்டைலாக ஏகே 61, 62 என்று தான் அழைக்கிறார்கள். வலிமை படத்தை தொடர்ந்து அஜித் வினோத்துடன் தான் கைகோர்க்கிறார், போனி கபூர் தயாரிக்கிறார்.

அடுத்தபடியாக 62 படம் விக்னேஷ் சிவனுடன் கூட்டணி அமைக்கிறார் அஜித். அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது, இதற்குள் இப்படம் குறித்து மேலும் பேசுவது சரியான விஷயம் இல்லை.

அடுத்ததாக ரசிகர்கள் ஏகே 61 அப்டேட்டிற்காக தான் வெயிட்டிங். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த புதிய பட பூஜை நடந்து முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அஜித் லேட்டஸ்ட் க்ளிக்

அஜித் கடைசியாக தனது குடும்பத்துடன் வெளியே சென்று உணவு அருந்திய புகைப்படங்கள் வந்தன. பின் தனது மனைவியுடன் அவர் எடுத்த போட்டோவும் வெளியாகி இருந்தது.

இப்போது அஜித் ஒரு பிரபலமான கோவிலுக்க சென்றுள்ளார், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அநேகமாக அது கேரளாவில் உள்ள ஒரு கோவிலாக இருக்கும் என சில ரசிகர்கள் கணிக்கின்றனர்.