இன்றைய ராசிபலன்!

0
294

மேஷம்:
நேயர்களே உங்களுக்கு பல்வேறு வகையில் அனுகூலமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி விடுவீர்கள். தொழில்ரீதியாக ஒரு வளமான பலனடைவீர்கள். நண்பர்கள் மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சியில் ஏற்றம் மிகுந்த பலனை பெறுவீர்கள்.

பிரச்சினைகள் பொருள் தேக்கங்கள் எல்லாம் விலகி ஒரு வளமான பலன் ஏற்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்பதால் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நல்ல பெயரை எடுக்க கூடிய வாய்ப்பு உண்டாகும். நவீன கரமான பொருட்களை வாங்க கூடிய யோகம் என்று கூட ஒரு சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

ரிஷபம்:
நேயர்களே எல்லா வகையிலும் அனுகூலமான பலன் கிடைக்கும். ஒரு உங்களுக்கு வளமும் வலிமையும் அதிகரிக்கும். உங்களுடைய வாக்குறுதிகளை சிறப்பாக காப்பாற்றுவீர்கள். தனவரவுகள் சாதகமாக இருந்து உங்களுடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய சிறப்பான நாள் இன்று. தொழில் ரீதியாக ஒரு வளமான பலனை தரக்கூடிய இனிமையான நாளாக இன்று இருக்கும்.

வேலைக்கு செல்பவர்களுக்கு எல்லா வகையிலும் மேன்மையான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் இருந்தவர்களுக்குக் கூட ஒரு நல்ல இடத்திலிருந்து சுப செய்தி கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவும் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான பழிச் சொற்கள் எல்லாம் விலகி நல்ல பெயர் எடுக்க கூடிய வாய்ப்புகள் ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்க கூடிய வாய்ப்பு உள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்ட மருத்துவ செலவுகள் எல்லாம் விலகி மன அமைதி ஏற்படக்கூடிய இனிய நாளாக இருக்கும்.

மிதுனம்:
நேயர்களே எடுக்கும் முயற்சியில் ஏற்றம் மிகுந்த பலன்கள் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும். அதனால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

தொழில், வியாபாரத்தில் வேலையாட்களைச் சற்று அனுசரித்து சென்றால் சாதகமான பலன்களை பெறலாம். வேலைக்கு செல்பவர்கள் முடிந்தவரை அதிகாரிகளுடன் பேசும்போது நிதானத்துடன் பேசுவதால் பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் மூலமாக கூட ஒரு அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

கடகம்:
நேயர்களே உங்களுக்கு பேச்சில் சற்று பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள். உடன் இருப்பவர்களை சற்று அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் வரவுக்கு மீறிய செலவு ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். அதனால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்பில் கவனம் செலுத்துங்கள்.

தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வது, புதிய நபர்களுடன் பேசும்போது சற்று பொறுமையுடன் பேசுவது நல்லது. வேலைக்கு செல்பவர்கள் முடிந்தவரை உங்களுடைய பணியில் கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியம். பொதுவாக நீங்கள் நல்லதாக நினைத்து கூறினாலும் உங்களின் கருத்து மற்றவர்களிடம் தவறாக சென்று சேர வாய்ப்புள்ளது. அதனால் மிகவும் அமைதியாக இருப்பது நல்லது. உங்களுடைய குடும்ப விஷயத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

சிம்மம்:
நேயர்களே உங்களுக்கு தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று தாமதமாகும். பேச்சில் சற்று பொறுமையுடன் இருப்பது உடன் இருப்பவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக பார்க்கும்போது வேலையாட்களைச் சற்று அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம்.

உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் நீங்கள் எதிலும் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். முடிந்தவரை உங்களுடைய குடும்ப விஷயத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பயணங்களைத் தவிர்த்து உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் அவசியம்.

கன்னி:
நேயர்களே உங்களுடைய வளமும், வலிமையும் அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலமாக ஒரு சில நல்ல பலன்களை அடைவீர்கள். தொழில் ரீதியாக படிப்படியான முன்னேற்றம் அடைவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

பேச்சில் சற்று பொறுமையுடன் இருப்பதால் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது மிக மிக சிறப்பு பிள்ளைகளுடன் பொறுமையுடன் நடந்து கொள்வதால் எந்த விஷயத்தையும் எளிதில் சாதிக்க முடியும். புதிய பொருட்களை வாங்க கூடிய யோகம் உள்ளது.

துலாம்:
நேயர்களே நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பணவரவுகள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்களுடைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்றக் கூடிய சிறப்பான நாளாக இருக்கும். தொழில்ரீதியாக லாபகரமான பலன் ஏற்படும்.

வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கூட நீண்ட நாட்களாகத் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் நிறைவேறும். உறவினர்களின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும். பிள்ளைகள் வழியில் ஒரு அனுபவம் ஏற்படும்.

விருச்சிகம்:
நேயர்களே எதிலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். தொழில் ரீதியாக லாபகரமான பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் மூலமாக ஒரு சில அனுகூலங்களை அடைவீர்கள். பயணங்கள் மூலமாக சாதகமான பலன்களை அடைவீர்கள்.

தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்பதால் சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி நிம்மதி அடையக் கூடிய நாளாக இருக்கும்.

தனுசு:
நேயர்களே உங்களுக்கு பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். முன்கோபத்தைச் சற்று குறைத்துக் கொண்டு நிதானமாகச் செயல்பட்டால் வளமான பலன் ஏற்படும். தொழில் ரீதியாக லாபகரமான பலன்கள் கிடைக்கும், என்றாலும் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. குறிப்பாக கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்துச் செல்வதால் வளமான பலன்களை அடையாளம்.

வேலைக்கு செல்பவர்கள் பேச்சில் சற்று பொறுமையோடு இருந்தால் வேலைகள் விரைவாக முடித்து நல்ல பெயர் எடுக்க முடியும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளியூர் மூலமாக ஒரு சில நல்ல வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட வீண் மருத்துவச் செலவுகள் எல்லாம் விலகி நிம்மதி ஏற்படும்.

மகரம்:
நேயர்களே பேச்சில் சற்று பொறுமையுடன் இருந்தால் ஒரு சிறப்பான பலனை நீங்கள் அடையலாம். எந்த எதிர்ப்பையும் சந்தித்து ஒரு ஏற்றமான பலனை அடைவீர்கள். தொழில் ரீதியாக உறவு லாபமான பலன்களை அடையலாம். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வளமான வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும் வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும்.

மேலதிகாரிகளிடம் பேசும்போது சற்று பொறுமையுடன் பேசுவதால் சின்னசின்ன பிரச்சனைகளை எளிதில் தீர்க்கக்கூடிய வளமான நாளாக இருக்கும். வண்டி வாகனங்களில் செல்லும் போது நிதானத்தைக் கடைப்பிடிப்பதும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்துச் செல்வதால் அனுகூலமான பலனை அடைய முடியும். உங்களுடைய அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக் கூடிய அருமையான நாளாக இருக்கும்.

கும்பம்:
நேயர்களே நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவும் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் மூலமாக ஒரு சில அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

தொழில்ரீதியாக லாபகரமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். இருந்தாலும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது அவசியம். முடிந்தவரை தூரப் பயணங்களை தள்ளி வைப்பது நல்லது.

மீனம்:
நேயர்களே உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று தாமதமாக கூடிய நாளாக இருக்கும். கோபத்தைச் சற்று குறைத்துக் கொள்ளவும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களுடன் அனுசரனை அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதால் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைய அதிக முயற்சி தேவைப்படும்.

வரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் உங்களின் தேவைகளை பூர்த்திசெய்ய எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு சற்று வேலைப்பளு இருக்கும். அதிகாரிகளைச் சற்று அனுசரித்துச் செல்வதால் மிகப் பெரிய பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய நாளாக இருக்கும். முடிந்தவரை ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கவும்.