அதிகரித்துள்ள வாழ்க்கைச் சுமை பொருளாதார சுமை- தலையில் பொருட்களை சுமந்து போராட்டம்!

0
65

வவுனியாவில் பொருட்கள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்புா் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் ஏனைய தமிழ் அமைப்புக்களும் இணைந்து இப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர் .  

இந்த போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று வாழ்க்கைச்சுமை மற்றும் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .

அத்தியாவசிய மற்றும் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு எதிராகவும் ராஜபச்சாக்களின் அரசாங்கத்ததை விரட்டியடிக்கும் நடவடிக்கையாகவும் இப்போராட்டம் இடம்பெற்றது.

மண்ணெண்ணை, பெற்றோல், சமையல் விரிவாயு, பானைகள், மின்சார உபகரணங்கள் போன்ற சமையலறை உபகரணங்களை சுமந்து வந்து இப்போராட்டத்தை மேற்கொண்டனர்.

வாழ்க்கைச் சுமை அதிகரிப்பு, பொருளாதாரச் சுமை அதிகரிப்பு என்பவற்றை எதிர்க்கும் வாசகங்கள் எழுதப்பட்ட  பதாதைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தை மேற்கொண்டனர்.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery