வீதிப் பயணத்தின் விதியை மாற்ற ஈழத்தமிழனின் புதிய கண்டுபிடிப்பு!

0
69

தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் வண்டிகளை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்களைத் தடுப்பதற்காக முன்மாதிரியான ஒருபொறிமுறையொன்று  வடிவமைக்கப்பட்டுள்ளது.

30 வருடங்களாக மோட்டார் வாகன திருத்துநராக இருக்கும் யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த எட்வின் மொரிஸ் என்பவரே இதனை வடிவமைத்துள்ளார்.

இதன்படி தலைக்கவசம் போடாமல் மோட்டார் வண்டியை இயக்க முடியாது. அத்துடன் தலைக்கவசத்தை போட்டாலும் தலைக்கவசத்தின் கொழுக்கிகளை மாட்டினால் மாத்திரமே மோட்டார் வண்டி இயங்குமாறு குறித்த பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.