வவுனியாவில் கைவிடப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

0
64

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை அலுவலகர்கள், சாரதிகள், நடத்துநர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (29.03) அதிகாலை 5.00 மணி முதல் மேற்கொள்ளப்பட்ட இப்பணிப்புறக்கணிப்பு போராட்டமானது கைவிடப்பட்டுள்ளது.

அடிப்படை சம்பளத்தில் 10,000ரூபா அதிகரிப்பு, வாழ்க்கைப்படியினை 7,500 ரூபாவாக உயர்த்துதல், இடைக்கால கொடுப்பனவான 5000 ரூபா நிரந்தரமாக்குதல், அதிகாரிகளுக்கான அடிப்படை சம்பளத்தினை அதிகரிக்க வேண்டும், வருடாந்த வேதன உயர்வினை நடைமுறைப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இலங்கை போக்குவரத்து சபை தலைமைப் பீடத்தின் உறுதிமொழியையடுத்து குறித்த பணிப்புறக்கணிப்பானது மாலை 5.30 மணியளவில் கைவிடப்பட்டது.

எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதிக்குள் முன்வைத்த கோரிக்கைகளுக்குத் தீர்வு பெற்றுத் தருவதாகத் தலைமைப்பீடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டதுடன், கடமையில் ஈடுபடவுள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.