லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

0
56

லிட்ரோ எரிவாயுவின் விலை கட்டாயம் அதிகரிக்குமென இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அறிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இதன்போது லிட்ரோ எரிவாயுவின் விலை தொடர்ந்து உயருமா என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு அவர் பதிலளிக்கையில், கட்டாயமாக எரிவாயு விலை அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இம்மாதம் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் மக்களின் அசௌகரியங்கள் குறையும் என நாமும் நம்புகின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.