மின் தடையால் அரச ஊழியர்களுக்கு புதிய நடைமுறை!

0
52

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் மின்சாரத்தை சேமிக்க அரசாங்க ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதுமான அளவு நீர் மற்றும் எரிபொருளின் பற்றாக்குறையினால் நாளாந்த மின்வெட்டை குறைப்பதற்கான வழிமுறையொன்றை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) முன் வைத்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நடைமுறைப்படுத்தினால் தினசரி மின்வெட்டை இன்னும் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் குறைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.