மற்றுமொரு வைத்தியசாலையிலும் நிறுத்தப்பட்டது சத்திரசிகிச்சை

0
57

 காலி கராப்பிட்டிய வைத்தியசாலையிலும் அனைத்து சத்திரசிகிச்சைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மயக்க மருந்துக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் போதிய அளவு இல்லாததே இதற்கு காரணம் என கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மருந்து கிடைக்கும் வரை சத்திரசிகிச்சை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இது குறித்து மருத்துவமனை ஊழியர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பேராதனை போதனா வைத்தியசாலையிலும் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.