போரால் உணவின்றி தத்தளிக்க போகும் உலகநாடுகள்…கைகொடுக்க தயாராகும் கனடா!

0
57

உக்ரைன் ரஷ்யா போரினால் உலக நாடுகள் சந்திக்க இருக்கும் உணவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறையை தீர்ப்பதற்கு வரும் மாதங்களில் கனடா கண்டிப்பாக உதவி செய்யும் என அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் போரானது அவ்விரு நாடுகளின் பொருளாதாரம், அடிப்படை வசதி மற்றும் உணவு தேவையை மட்டும் பாதிக்காமல், உலக அளவில் உணவு தேவை மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை உருவாகியுள்ளது.

இந்தநிலையில், வரும் மாதங்களில் உலக நாடுகள் சந்திக்க இருக்கும் உணவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கனடா முக்கிய பங்காற்ற இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்வாய்க்கிழமை வான்கூவரில் ஆற்றிய உரையில், வரும் மாதங்களில் கனடா உலக நாடுகளின் மேசைகளில் உணவுகளை வைத்து ஒளியை ஒளிர செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களிடம் உரையாடியதில், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை சார்ந்து இருப்பதை அவர்கள் நிறுத்த விரும்பவில்லை என்றும் அவர்கள் துய்மையான மற்றும் பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு விரைவில் மாற திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 உலக நாடுகளின் இந்த முன்னெடுப்பிற்கு வரும் காலங்களில் கனடா முக்கிய பங்கேற்றப் போகிறது எனவும் தெரிவித்துள்ளார்.