பொதுமக்களுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

0
76

நாட்டில் இன்று (30-03-2022), நாளை (31-03-2022)  டீசலுக்காக வரிசையில் நிற்க வேண்டாமென பொதுமக்களிடம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

37,500 மெற்றிக் தொன் டீசலை கொண்டு வந்த கப்பலில் இருந்து நேற்று செவ்வாய்கிழமை (29-03-2022) திட்டமிட்டபடி டீசலை இறக்க முடியாமல் போனமை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அத்தியாவசிய சேவைகளுக்கு தடங்கலின்றி தொடர்ச்சியாக டீசல் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெற்றோல் விநியோகமும் வழமை போன்று தட்டுப்பாடு இன்றி இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.