நீர் விநியோகத்தையும் பாதிக்கும் எரிபொருள் நெருக்கடி!

0
61

மின்சாரம் தடைப்படும் போது நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்களுக்கு டீசல் கிடைக்க்காவிட்டால் நீர் சுத்திகரிப்பை மேற்கொள்ள முடியாது.

இதனால், பல பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாமல் போகும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக பிலியந்தலை, பன்னிப்பிட்டிய, மஹரகம, ஹோகந்தர, மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் பாதிக்கப்படும் என மேற்கு பிராந்திய பொது முகாமையாளர் ஏ.கே.கபுருகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் வறட்சியான காலநிலை நிலவுவதன் காரணமாக நீரின் தேவை அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.