நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் இளைஞன் தாக்குதல்!

0
64

வவுனியாவில் இளைஞன் மீது சிலர் நேற்றையதினம் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அவர் கடும் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக ஈபிடிபி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் மற்றும் சில கட்சி உறுப்பினர்கள், ஊடகவியலாளர்களை தனது முகநூல் வாயிலாக விமர்சித்தும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர் சிலர் தொடர்பில் புகைப்படங்களை வெளியிட்டு கருத்து தெரிவித்து வந்த நிலையிலேயே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தலை, முகம், கை, கால் பகுதிகளில் பலமாக தாக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தலைமையில் சிலர் நொச்சிமோட்டை பகுதியில் வைத்து என்னை தாக்கினர். பின்னர் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள தயா என்பவரின் வீட்டிற்கு அருகில் வைத்தும் தாக்கினர்.

பின்னர் எனது தொலைபேசியை எடுத்துவிட்டு நான் இறந்துவிட்டதாக நினைத்து மகாறம்பைக்குளம் காவல் நிலையத்திற்கு முன்பாக என்னை போட்டுவிட்டு சென்றனர். இதற்கு முதல் காரணம் திலீபன் எம் பியே என தெரிவித்துள்ளார்.