திருமணமான 4 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண்! தெரியவந்த காரணம்

0
70

தமிழ்நாட்டில் திருமணமான நான்கே நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னையில் தான் இந்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. வடக்கு கொரட்டூர், அக்ரகாரம், எல்லையம்மன் நகரைச் சேர்ந்த சந்தியா மற்றும் ராஜா ஆகியோருக்கு கடந்த 4 நாட்கள் முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த திருமணத்தில் சந்தியாவுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் விரக்தியில் இருந்த சந்தியா திருமணமான 4வது நாளில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான நான்கு நாளில் புதுமணப்பெண் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அவரின் குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.