தன்னை விட 11 வயது குறைவான பெண்ணை மணக்கும் நடிகர் சிம்பு!

0
73

நடிகர் சிம்புவின் வீட்டிற்கு அவரின் வருங்கால மனைவியான நடிகை நிதி அகர்வால் குடி பெயர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிலம்பரசன் என்கிற சிம்பு (39) இவரும், நடிகை நிதி அகர்வாலும் (28) சேர்ந்து கடந்த ஆண்டு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.

அப்போது படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. தற்போது நிதி அகர்வால் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடியும் நிலையில் அதன்பின்னர் சிம்புவுடன் அவருக்கு திருமணம் நடக்கவுள்ளது.

இதனிடையில் சென்னை தி.நகரில் உள்ள சிம்புவின் வீட்டிற்கு நிதி அகர்வால் ஏற்கனவே இடம்பெயர்ந்துவிட்டதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது. சில மாதங்களாக இருவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகின்றனர்.

சிம்பு – நிதி அகர்வால் திருமணத்திற்கு இருவரின் குடும்பத்தாரும் பச்சைக்கொடி காட்டிவிட்ட நிலையில், இது தொடர்பான அறிவிப்பு நல்ல நாளில் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.